சிங்கிலாக மாட்டிய நபர் ... லத்தியால் அடித்து மிதிக்கும் போலீஸார்... வைரலாகும் வீடியோ
ஒரு நாடு இரு கொள்கை என்ற அடிப்படையில் சீனா மற்றும் இங்கிலாந்து நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தாலும், ஹாங்காங்கின் பெரும்பாலான பகுதிகள் சீனாவுக்கு சொந்தமாகவே உள்ளது. அதனால் தனது அதிகாரத்தை அங்கு அதிகளவில் செலுத்தின்வருகிறது.
இதுவரை, ஹாங்காங்கில் இருந்த சிறப்பு அதிகாரத்தை நீக்கிவிட்டு, தன்னுடன் இணைத்துக்கொள்ள சீனா முயல்கிறது. அப்படி ஒரு மசோதா நிறைவேறினால், அங்குள்ள மக்கள் எவ்வித எங்கு வேண்டுமானாலும், கடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் , மக்களின் உருமைகள் பறிபோக வாய்ப்புள்ளதாக பயந்து தற்போது ஹாங்காங் மக்கள் போராடி வருகின்றனர்.
சீனா எவ்வளவு முயன்றாலும் ஹாங்காங் மக்கள் தங்களை, இங்கிலாந்துக்கும் இல்லாமல், சீனாவுக்கும் இல்லாமல் ஹாங்காங் மக்களாகவே க்ருதுகின்றனர்.
இந்நிலையில், நாள்தோறும், ஹாங்காங் மக்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் வலுத்து வரிகிறது. அதன் அடிப்பையில் ஹாங்காங் அரசு பல்வேறு போரட்டங்களை முடக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இன்று, போராட்டக்கார்கள் போராடியபோது, ஒருவர் மட்டும் போலீஸாரிடம் தனியாகச் சிக்கிக்கொண்டார். அப்போது, போலீஸார் கும்பலாக சேர்ந்து அவரை அடித்து உதைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.