வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 13 ஜனவரி 2023 (12:52 IST)

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: நியூசிலாந்து அணியின் பிரபல வீரர்கள் விலகல்!

Newzeland
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நியூசிலாந்து அணியின் இரண்டு முக்கிய வீரர்கள் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஒரு நாள் தொடர் ஜனவரி 18ஆம் தேதி தொடங்க உள்ளது என்பதும் ஜனவரி 27ஆம் தேதி முதல் டி20 தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் தொடரில் விளையாடிய கேன் வில்லியம்சன் மற்றும் டிம் சவுதி ஆகிய இருவரும் ஓய்வு எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளதை அடுத்து இந்திய தொடரில் இடம்பெறவில்லை. இதனை அடுத்து சாண்ட்னர் இந்தியா வரும் நியூஸிலாந்து அணியின் கேப்டனாக நியமனம் செய்திருக்கிறார் 
 
இந்தியாவில் விளையாட வரும் நியூசிலாந்து அணியின் முழு விவரம்: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), பின் ஆலென், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டேன் கிளவர், டேவோன் கான்வே, ஜாகோப் டப்பி, லக்கி பெர்குசன், பென் லிஸ்டர், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் ரிப்பன், ஹென்றி சிப்லே, இஷ் சோதி, பிளேர் டிக்னர்.
 
Edited by Siva