1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 14 ஜூன் 2021 (07:54 IST)

22 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்தை சொந்த மண்ணில் வீழ்த்தியது நியூசிலாந்து!

22 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்தை சொந்த மண்ணில் வீழ்த்தியது நியூசிலாந்து!
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த நிலையில் நேற்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இதனையடுத்து நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது
 
இங்கிலாந்து மண்ணில் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் நியூசிலாந்து அணி தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முடிவடைந்த 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 303 ரன்கள் எடுத்தன. அதன் பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 388 ரன்கள் எடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது
 
இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அடுத்து 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 41 ரன்கள் எடுத்தால் நியூசிலாந்து அணி வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த ரன்களை அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு எடுத்ததை அடுத்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது இதனை அடுத்து இந்த தொடரையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது