1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 7 ஜூன் 2021 (09:30 IST)

லில்லிபெட் டயானா - மகளை அறிமுகம் செய்த ஹாரி - மேகன் தம்பதி!

ஹாரி - மேகன் தம்பதியருக்கு ஏற்கெனவே ஆண் குழந்தை உள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. 

 
இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகனும் காதலித்து அரச குடும்பத்தின் ஒப்புதலோடு திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் அரசு குடும்பத்துடன் ஏற்பட்ட சில மனஸ்தாபங்கள் காரணமாக அரச உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகி  கலிபோர்னியாவில் வசித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இவர்களுக்கு ஏற்கெனவே ஆண் குழந்தை உள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. ஹாரி - மேகன் தம்பதியர் தங்களுடைய இரண்டாவது குழந்தைக்கு லில்லிபெட் டயானா மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என பெயரிட்டுள்ளனர்.