செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (15:29 IST)

அமெரிக்க அதிபர் விருந்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு!

அமெரிக்க அதிபர் விருந்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு நாளை வருகை தர உள்ளார் என்பது தெரிந்ததே. தனது மனைவியுடன் அவர் ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலைப் சுற்றிப்பார்க்க உள்ளதாகவும் பிரதமர் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களிடம் அவர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் இந்த வருகையின்போது இந்தியா-அமெரிக்கா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் டெல்லியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு நாளை இரவு பிரதமர் மோடி விருந்து அளிக்க உள்ளார். இந்த விருந்தில் பல பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதில் இந்த விருந்தில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
டெல்லியில் இந்த விருந்து நடைபெற்ற போதிலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுப்பது குறித்த செய்தி இதுவரை வெளியாகவில்லை என்பதும் அவருக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது