1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : சனி, 2 நவம்பர் 2019 (20:45 IST)

புது ஸ்டைலா இது ? வித்தியசமாக பேட்டிங் செய்த வீரர்....வைரல் வீடியோ

ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்ற  உள்ளூர் விளையாட்டுப் போட்டி ஒன்றில், ஜார்ஜ் பெய்லி என்ற கிரிக்கெட் பேட்ஸ்மேன், வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமாக  பேட்டிங் செய்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள ஹேபார்ட் நகரில் உள்ள 7 வது ஷெபீல்ட் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
 
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த விக்டோரியா அணி 127 ரன்களுக்கு ஆட்டமிழந்த்து. அடுத்து ஆடிய தாம்பெய்னி முதல் நால் ஆட்ட நேர முடிவின்போது 226 ரன்கள் எடுத்து விக்டோரியா அணியை  விட முன்னிலை பெற்றிருந்தது.
 
இந்த ஆட்டத்தின்போது, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிவீரர் ஜார்ஜ் பெய்லி ஒரு சாய்வாக நின்று பேட்டிங் செய்தார். இவர் பேட்டிங் புதுமையாக இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.