வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 31 அக்டோபர் 2019 (20:41 IST)

ஐ.எஸ்.ஐ கால்பந்து: சென்னை அணிக்கு மீண்டும் ஒரு தோல்வி!

கடந்த சில நாட்களாக ஐஎஸ்எல் கால்பந்து போட்டி தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் சென்னை மற்றும் ஏடிகே அணிகள் மோதிய ஒரு போட்டி நேற்று நடைபெற்றது 
 
இந்த போட்டி ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் ஏடிகே அணி சென்னை அணியை வீழ்த்தியது 
 
ஏடிகே அணி ஒரு கோலும் சென்னை அணி கோல் எதுவும் போடவில்லை என்பதால் 1-0 என்ற கோல் கணக்கில் ஏடிகே அணி வெற்றி பெற்றது 
 
ஏற்கனவே சென்னை அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் தோல்வியும் ஒரு போட்டியை டிராவும் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்னும் ஒரு வெற்றியைக் கூட சென்னை அணி பெறாததால் புள்ளி பட்டியலில் ஒரே ஒரு புள்ளியை மட்டுமே பெற்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது 
 
சென்னை அணியை வீழ்த்திய ஏடிகே அணி 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே ரீதியில் சென்றால் சென்னை அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது கடினம் என கால்பந்து ரசிகர்கள் கவலை தெரிவித்துவருகின்றனர்