1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 28 ஜனவரி 2021 (17:26 IST)

நாதன் லயனின் 100 ஆவது டெஸ்ட் போட்டி… இந்திய வீரர்கள் அளித்த பரிசு!

ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் நாதன் லயன் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் சுழல்பந்து வீச்சாளரான நாதன் லயன் தற்போது விளையாடும் சுழல்பந்து வீச்சாளர்களில் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி அவரின் 100 ஆவது போட்டியாகும். அதனால் அவரைக் கௌரவிக்கும் வகையில் இந்திய வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்ட ஜெர்ஸியை அவருக்கு வழங்கினர்.

அந்த ஜெர்ஸியைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ள லயன் ‘இது மிகப்பெரிய பரிசு’ என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.