1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 15 ஜனவரி 2021 (08:02 IST)

ஒரே வெளிநாட்டு பயணத்தில் 3 வகை போட்டியிலும் அறிமுகம்: நடராஜனுக்கு குவியும் வாழ்த்து!

130 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியாவில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெறுவது என்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இந்திய அணியில் ஏதாவது ஒருவகை போட்டியில் அறிமுகமாகவே பல வீரர்கள் மிகவும் கடுமையாக உழைத்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்
 
இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் ஒரே ஒரு சுற்று பயணத்தில் இந்திய அணியின் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வகை போட்டிகளிலும் அறிமுகமாகி இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 
 
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணியில் முதலில் ஒரு நாள் போட்டியில் அறிமுகமான நடராஜன் அதன் பின்னர் டி20 போட்டியிலும் அறிமுகமானார். இந்த இரண்டு வகை போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் இன்று நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியிலும் அவர் அறிமுகமாகியிருக்கிறார் 
 
ஒரே சுற்றுப்பயணத்தில் ஒரு வீரர் மூன்று வகை போட்டியிலும் அறிமுகமாவது இது தான் முதல் முறை என்பதும், இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது, மேலும் #natty என்ற ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.