பரபரப்பான கிரிக்கெட் போட்டியின் இடையே திடீரென நிர்வாணமாக மைதானத்தில் ஓடிய வாலிபர்

Last Modified திங்கள், 29 ஜனவரி 2018 (23:21 IST)
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று பெர்த் நகரில் இரு அணிகளுக்கு இடையே 5வது ஒருநாள் போட்டி நடந்தது

இந்த நிலையில் 23 வயது வாலிபர் ஒருவர் திடீரென போட்டி பரபரப்பாக நடைபெற்று கொண்டிருக்கும்போது நிர்வாணமாக மைதானத்தில் ஓடினார். இதனால் வீரர்கள் அதிர்ச்சி அடைந்து சில நிமிடங்கள் போட்டியை நிறுத்தினர்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக பாதுகாப்பு காவலர்கள் அந்த நிர்வாண நபரை பிடித்து மைதாத்திற்கு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபரின் பெயர் பென் ஜென்கின்ஸ் என்று தெரியவந்தது. இருப்பினும் அவர் எதற்காக நிர்வாணமாக ஓடினார் என்பது தெரியவில்லை. 54000 பேர் முன்னிலையில் திடீரென ஒருவர் நிர்வாணமாக ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதில் மேலும் படிக்கவும் :