1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 20 ஜூலை 2022 (12:50 IST)

கிரிக்கெட்டில் களமிறங்கினார் முத்தையா முரளிதரன் மகன்!

naren muralidharan
கிரிக்கெட்டில் களமிறங்கினார் முத்தையா முரளிதரன் மகன்!
முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் மகன் நரேன் என்பவர் கிரிக்கெட்டில் களமிறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் மகன் நரேன் முரளிதரன் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் களமிறங்கி உள்ளார்
 
இவர் விரைவில் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முத்தையாவின் மகனின் பந்துவீச்சு அவரது தந்தை போலவே உள்ளது என்றும் அவரும் விக்கெட் வீழ்த்தி சாதனை செய்வார் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள நரேன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன