1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 4 ஜூலை 2022 (19:49 IST)

’கைதி’ இந்தி ரீமேக்: நரேன் கேரக்டரில் அஜித் பட நடிகை

kaidhi
கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் தற்போது இந்தியில் உருவாகி வருகிறது. 
 
பிரபல ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் அவரே கார்த்தி வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
அதுமட்டுமின்றி இந்த படத்தில் முக்கிய கேரக்டரான காவல்துறை அதிகாரி நரேன் கேரக்டரில் நடிகை தபு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது
 
இவர் ஏற்கனவே அஜீத்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்பட பல தமிழ் படங்களிலும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கைதி திரைப்படத்தில் ஒரு நடிகை கூட இல்லாத நிலையில் கைதி ஹிந்தி ரீமேக் படத்தில் தபு உள்பட ஒரு சில நடிகைகள் நடிக்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது