1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (19:13 IST)

மும்பைக்கு 8வது தோல்வியா? முதல் வெற்றியா?

mi vs lsg
மும்பைக்கு 8வது தோல்வியா? முதல் வெற்றியா?
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி 7 போட்டிகளில் விளையாடி ஏழிலும் தொடர் தோல்வி அடைந்த நிலையில் இன்று 8வது போட்டியாக லக்னோ அணியுடன் மோத உள்ளது
 
இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் லக்னோ அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மும்பை அணியை பொறுத்தவரை 7 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் உள்ளது. லக்னோ அணி 7 போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றியும் மூன்றில் தோல்வியும் அடைந்து 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்றால் 4வது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது