திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

கடைசி இடத்தில் இருந்த ஐதராபாத் இன்று இரண்டாமிடம்: 5 போட்டிகளில் தொடர் வெற்றி

srh
கடைசி இடத்தில் இருந்த ஐதராபாத் இன்று இரண்டாமிடம்: 5 போட்டிகளில் தொடர் வெற்றி
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் முடிந்த பின்னர் கடைசி இடத்தில் இருந்த ஹைதராபாத் அணி இன்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
 நேற்று நடைபெற்ற பெங்களூர்-ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றதன் மூலம் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 68 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனை அடுத்து 69 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணி 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
 
இதன் மூலம் 10 புள்ளிகளுடன் ஐதராபாத் அணி 2-வது இடத்தில் உள்ளது என்பதும் இன்னும் ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்று விட்டால் முதல் இடத்தை அடைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது