1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 மே 2023 (17:57 IST)

அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு எதிரொலி: திருவள்ளூரில் 75 டாஸ்மாக் பார்களுக்கு சீல்

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவின் பெயரில் தமிழகம் முழுவதும் அனுமதி இன்றி இயங்கும் டாஸ்மாக் கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
 
இன்று சென்னையில் நடைபெற்ற கலால் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மதுபான கூடங்களை கண்காணிக்க வேண்டும் என்றும் மதுபான கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மூடப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் உரிமம் பெற்றவர்களுக்கு மட்டுமே மெத்தனால் விற்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். 
 
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி இயங்கிய 75 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சிபாஸ் கல்யாண் உத்தரவை தொடர்ந்து போலீசார் அதிரடி சோதனை நடத்தியதாகவும் இதில் 75 பார்கள் உரிமை இல்லாமல் நடத்தப்பட்டதை அடுத்து அந்த பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran