1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 12 அக்டோபர் 2020 (07:53 IST)

டீகாக், சூர்யகுமார் யாதவ் அரைசதங்கள்: மும்பை அபார வெற்றி!

நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. மேலும் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
நேற்றைய போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்திருந்தது. தவான் 69 ரன்களும் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 42 ரன்களும் எடுத்து இருந்தனர் 
 
இந்த நிலையில் 163 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் மற்றும் டீகாக் ஆகியோரின் அபார அரைசதம் காரணமாக 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 
 
நேற்றைய போட்டியில் அபாரமாக விளையாடிய டீகாக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. டெல்லி அணியும் 10 புள்ளிகளுடன் இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. கொல்கத்தா பெங்களூரு ஹைதராபாத் ராஜஸ்தான் சென்னை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் 3 முதல் எட்டாவது இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது