1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 ஏப்ரல் 2022 (19:48 IST)

முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுக்களை இழந்த மும்பை: ரோஹித் சர்மா, இஷான் கிஷான் டக்-அவுட்

csk vs mi match
முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுக்களை இழந்த மும்பை: ரோஹித் சர்மா, இஷான் கிஷான் டக்-அவுட்
ஐபிஎல் தொடரின் 33வது போட்டி இன்று மும்பை மற்றும் சென்னை அணிகள் இடையே நடைபெற்று வரும் நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீசியதை எடுத்து சற்று முன் மும்பை அணி பேட்டிங்கில் களமிறங்கியது
 
இந்த நிலையில் முதல் ஓவரில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.  இரண்டு பேர்களும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனது மும்பை அணிக்கு பெரும் சோகமாக உள்ளது 
 
இருப்பினும் தற்போது சூர்யகுமார் யாதவ் மற்றும் ப்ரவீஸ் ஆகிய இருவரும் அடித்து விளையாடி வந்த நிலையில் சற்றுமுன் வரை மும்பை அணியின் பிரவீஸ் தனது விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து  3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் மட்டுமே மும்பை அணி எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது