மகளிர் அணி ஜெர்ஸியை அணிந்து இன்று விளையாடும் மும்பை இந்தியன்ஸ்: என்ன காரணம்?
ஐபிஎல் தொடரில் இதுவரை 21 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று 22 ஆவது போட்டியாக மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் மதியம் மூன்று முப்பது மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணி மகளிர் ஜெர்சி அணிந்து விளையாட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
அனைவருக்கும் கல்வி மற்றும் விளையாட்டு கிடைக்க வேண்டும் என்ற முன்னெடுப்பிற்காக இன்று மாலை வான்கடே மைதானத்தில் நடைபெறும் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் தங்களது மகளிர் அணியின் ஜெர்சியை அணிந்து மும்பை இந்தியன்ஸ் அணி விளையாட உள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், 200 குழந்தைகளுக்கு மைதானத்தில் போட்டியை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை இந்தியன்ஸ் அணி முதன் முதலாக தங்களது மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி ஜெர்ஸியை அணிந்து விளையாட உள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva