1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 15 ஏப்ரல் 2023 (16:15 IST)

பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து...12 பேர் பலி..25 பேர் படுகாயம்

accident
மஹாராஷ்டிர மாநிலத்தில்   பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 12 பேர் பலியாகினர்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா (பாஜக ஆதரவு அணி) தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இம்மா நிலம் புனேவில் இருந்து மும்பை நோக்கி இன்று  அதிகாலையில், பேருந்து ஒன்று கொண்டிருந்தது. இப்பேருந்தில், 40 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில், அதிகாலை மும்பை –புனே  நெடுஞ்சாலையில், லோனாவாலா என்ற பகுதியில் போகும்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில், 25க்கும் மேற்பட்ட பயணிகளுக்கும் படுகாயம் ஏற்பட்டது. மேலும் இவ்விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

இந்த விபத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவ்விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.