கோப்பையுடன் ஊர்வலம் – பொதுமக்கள் உற்சாக வரவேற்பு !

Last Modified செவ்வாய், 14 மே 2019 (15:25 IST)
ஐபிஎல் சாம்பியன் கோப்பையுடன் மும்பை இந்தியன்ஸ் அணி சாலைகளில் திறந்தவெளி பேருந்துகளில் ஊர்வலமாக சென்றனர்.

ஐபிஎல் 12 ஆவது சீசனின் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் சென்னை அணியை வீழ்த்திக் கைப்பற்றியுள்ளது. 4 ஆவது முறையாகக் கோப்பையை வென்றதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிகமுறைக் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது மும்பை அணி.

கடந்த 12 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணி இன்று தனது சொந்த ஊருக்குக் கோப்பையோடு சென்றது. அங்கு முக்கிய சாலைகளில் திறந்த பேருந்தில் நின்றுகொண்டு கோப்பையோடு மும்பை இந்தியன்ஸ் அணி ஊர்வலம் சென்றது. இந்த ஊர்வலத்துக்கு மும்பை மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்பு அளித்தனர்.இதில் மேலும் படிக்கவும் :