செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2020 (11:51 IST)

தொழிலதிபருடன் காஜல் அகர்வால் திருமணம்: திருமண தேதி அறிவிப்பு!

பிரபல நடிகை காஜல் அகர்வால் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தது 
 
இந்த நிலையில் தற்போது தன்னுடைய சமூக வலைத்தளத்தில் காஜல் அகர்வால் இதனை உறுதி செய்துள்ளார். கௌதம் கிட்சுலு என்ற தொழிலதிபரை நான் அக்டோபர் 30-ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளேன் என்றும் மும்பையில் உள்ள ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியில் இந்த திருமணம் நடைபெற உள்ளதாகவும் இந்த திருமணத்தில் எங்களுடைய நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப் படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கொரோனா நேரத்தில் அதிக கூட்டங்களை கூட்ட விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் திரையுலகை தாண்டி தற்போது தான் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க உள்ளதாகவும் தனக்காக வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் திருமணத்திற்கு பின்னரும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தான் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காஜல் அகர்வாலுக்கு திருமணம் என்ற தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது