செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 17 மே 2018 (07:29 IST)

பஞ்சாபை வீழ்த்தி 4வது இடத்திற்கு முன்னேறிய மும்பை

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 50வது போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதியது. இந்த போட்டியில் தோல்வி அடையும் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழக்கும் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த போட்டிய் முக்கியமான போட்டியாக கருதப்பட்டது. இந்த நிலையில் இந்த போட்டியில் மும்பை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெற்றதோடு, நல்ல ரன்ரேட் காரணமாக புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.
 
மும்பை மற்றும் பஞ்சாப் அணி போட்டியின் ஸ்கோர் விபரம்
 
மும்பை: 186/8  20 ஓவர்கள்
 
பொல்லார்டு: 50 ரன்கள்
பாண்ட்யா : 32 ரன்கள்
இஷான் கிஷான்: 20 ரன்கள்
 
பஞ்சாப் அணி: 183/5 20 ஓவர்கள்
 
ராகுல்: 94
பின்ச்: 46
 
ஆட்டநாயகன்: பும்ரா (மும்பை பந்துவீச்சாளர்)
 
இந்த போட்டியில் கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருந்த பஞ்சாப் அணி 13 ரன்கள் மட்டுமே எடுத்ததால் தோல்வி அடைந்தது.