செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 16 மே 2018 (06:18 IST)

கொல்கத்தாவுக்கு மேலும் ஒரு வெற்றி! பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா?

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியின் 49வது போட்டியில் ராஜஸ்தான் அணியை கொல்கத்தா அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்று பெற்று 14 புள்ளிகளை கொண்டுள்ளதால் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. லின் 45 ரன்களும், தினேஷ் கார்த்திக் 41 ரன்களும் எடுத்தனர். 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய கொல்கத்தா அணியின் குல்தீவ் யாதவ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.
 
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 14 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இந்த அணிக்கு முன் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மட்டுமே உள்ளன. தோல்வி அடைந்த ராஜஸ்தான் அணி 12 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.