திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (17:09 IST)

முகமது ஷமியின் மனைவிக்கு வரும் தொடர் கொலை மிரட்டல்கள்… காரணம் இதுதான்!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் முன்னாள் மனைவி தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக புகார் அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி கடந்த ஆண்டு பல புகார்களை முன்வைத்தார். குறிப்பாக ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்ப்பு இருப்பதாக புகைப்படங்கள் மற்றும் மெசேஜ்ஜுகளை வெளியிட்டார். இதையடுத்து ஷமியும் அவரும் இப்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதற்கு ஷமியின் மனைவி ஹிந்துக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அதையடுத்து அவருக்கு தினமும் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக அவர் சொல்லியுள்ளார். இது சம்மந்தமாக கொல்கத்தா காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி ஆகஸ்ட் 9 அன்று புகார் அளித்தார். ஆனால் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அவரது மனுவில் ‘இந்து சகோதரர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததில் இருந்து எந்நேரமும் எனக்குக் கொலை மிரட்டல்கள் வருகின்றன. சமூக வலைதளங்களில் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறேன். என் மகள்களுடன் தனியாக வாழ்கிறேன். அதனால் பாதுகாப்பு இல்லை. எனவே ஒவ்வொரு நொடியும் பயத்துடன் வாழ்கிறேன். மனிதாபிமான அடிப்படையில் நடந்துகொண்டு எனக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.