எனது பள்ளி நாட்கள் பசுமையானது: எம்.எஸ். தோனி!
எனது பள்ளி நாட்களில் மிகவும் பசுமையானது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார்.
எம்எஸ் தோனிக்கு சொந்தமான ஓசூரில் உள்ள பள்ளியில் கிரிக்கெட் மைதான தொடக்கவிழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட எம்எஸ் தோனி பேசியபோது நான் பத்தாம் வகுப்பில் கூட பாஸ் செய்ய மாட்டேன் எனது தந்தை முடிவு செய்தார். ஆனால் நான் தேர்ச்சி அடைந்ததால் அவர் மகிழ்ச்சி அடைந்தார்
ஏழாம் வகுப்பில் இருந்தே கிரிக்கெட் விளையாடுவதால் படிப்பில் நான் சராசரி மாணவன்தான். ஆனாலும் எந்த பள்ளிக்கு சென்றாலும் எனக்கு டைம் மெஷினில் பயணிப்பது போல இருக்கும்
எனது பள்ளி நாட்களில் மிகவும் பசுமையானது. அந்த பசுமையான நாட்களை நான் அடிக்கடி நினைவுபடுத்தி பார்த்துக் கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்
Edited by Mahendran