செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2019 (07:37 IST)

கம்பீரின் கிரிக்கெட் முடிவுக்கு வந்தது என்னால்தான் – பாக் வீரர் சர்ச்சைப் பேச்சு !

பாகிஸ்தான் வீரர் முகமது இர்பான் கவுதம் கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு வந்தது என்னால்தான் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பவுலரான முகமது இர்பான் அவரது உயரத்திற்காக சர்வதேசப் போட்டிகளில் கவனம் பெற்றார். இதுவரைப் பாகிஸ்தான் அணிக்காக 60 ஒருநாள் போட்டிகளிலும், 20 டி 20 போட்டிகளிலும், 4 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேசப் போட்டிகளில் விளையாடாமல் இருந்து வருகிறார்.

இவர் சமீபத்தில் பாகிஸ்தாலில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ’2012-ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடந்த தொடரோடு கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அந்தத் தொடரில் அவரை நான் 4 முறை ஆட்டமிழக்க செய்தேன். அந்தத் தொடரின் போது அவர் என் முகத்தையே பார்க்கமாட்டார். வலைப்பயிற்சியில் கூட என் முகத்தைப் பார்க்க விரும்பமாட்டார். அந்த தொடரில் சொதப்பிய பின் இங்கிலாந்து தொடரில் மட்டும் இந்திய அணியில் கம்பீர் இடம் பெற்றார். அதன் பின் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஒருவகையில் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து வைத்தது நான்தான் எனக் கூறலாம். விராட் கோலி கூட உங்கள் உயரத்தை வைத்து பந்தின் வேகத்தைக் கணிக்க முடியவில்லை என என்னிடம் கூறியுள்ளார்.’ எனக் கூறியுள்ளார்.