இலங்கைக்கு எதிரான 2வது டி20, மீண்டும் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான்

Last Modified திங்கள், 7 அக்டோபர் 2019 (22:31 IST)
இலங்கை அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் ஏற்கனவே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது

இந்த நிலையில் இன்று லாகூர் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டி20 போட்டியிலும் இலங்கை அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 182 ரன்கள் எடுத்தது. ராஜபக்சா 77 ரன்களும், ஜெயசூர்யா 34 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது

இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி வரும் 9ஆம் தேதி லாகூர் மைதானத்தில் நடைபெறும்


இதில் மேலும் படிக்கவும் :