செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 5 ஏப்ரல் 2018 (12:21 IST)

இந்தியாவுக்கு முதல் தங்கம்: காமன்வெல்த் போட்டியில் அசத்திய வீராங்கனை

இந்தியா உள்பட 70க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்குபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நேற்று தொடங்கிய நிலையில் குருராஜா என்பவர் 56 கிலோ பளுதூக்கும் போட்டி பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்று பதக்கப்பட்டியலுக்கு பிள்ளையார் சுழிபோட்டார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சற்றுமுன்னர் மீராபாய் சானு என்ற வீராங்கனை 48 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். ஏற்கனவே நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இவர் ஐந்து பதக்கங்கள் பெற்றுள்ள நிலையில் தற்போது அவர் ஆறாவது பதக்கத்தை வென்றுள்ளார்.

தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு அரசியல் தலைவர்களும், விளையாட்டு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.