இந்த தொகைக்கு ஸ்மித் ஐபிஎல் தொடரில் விளையாடமலேயே இருக்கலாம்… முன்னாள் கேப்டன் பதில்!
நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் ஆஸி அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை டெல்லி அணி 2.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு ஆண்டு இறுதி டிசம்பரில் நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை குறிப்பிட்ட தேதியில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. அதன்படி ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்வதற்கான ஏலத்திற்கான அறிவிப்பு வெளியான நிலையில் 1,097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
அவற்றில் அணிகள் குறிப்பிட்ட வீரர்களை தேர்வு செய்த நிலையில் ஐபிஎல் போட்டி ஏலத்திற்கான வீரர்கள் எண்ணிக்கை 292 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 125 பேர் வெளிநாட்டினர், 164 பேர் இந்திய வீரர்கள். வீரர்களுக்கான ஏலம் சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. அதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித் அடிப்படை விலையை விட கொஞ்சம் அதிகமாக 2.2 கோடி ரூபாய்க்கு டெல்லி அணியால் எடுக்கப்பட்டார்.
இது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்நிலையில் இப்போது ஆஸி அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் இவ்வளவு கம்மியான தொகைக்கு விளையாடுவதற்காக ஸ்மித் தன்னுடைய குடும்பத்தை பிரிந்து செல்வார் என எனக்குத் தோன்றவில்லை. அவர் 2.2 கோடி ரூபாய்க்காக தனது குடும்பத்தைப் பிரிந்து 2 மாதங்கள் இருக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.
கடந்த முறை அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டனாக இருந்தும் சிறப்பாக செயல்படவில்லை என்பதால் அவரை கழட்டி விட்டது அணி நிர்வாகம்.