திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (17:16 IST)

தோனி பாயுடன் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்… புஜாரா மகிழ்ச்சி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ள புஜாரா தோனியுடன் விளையாட ஆர்வமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

சென்னை அணி கடந்த சில ஆண்டுகளாக இளம் வீரர்களைக் காட்டிலும் 30 வயதைத் தாண்டிய மூத்த வீரர்களையே தங்கள் அணியில் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதனால் ரசிகர்கள் சிஎஸ்கேவை டாடீஸ் டீம் என கேலி செய்வது உண்டு.

இந்நிலையில் நேற்று நடந்த ஐபிஎல் ஏலத்திலும் மொயின் அலி மற்றும் புஜாரா ஆகிய மூத்த வீரர்களையே அதிகம் ஏலத்தில் எடுத்துள்ளது. அதிலும் டெஸ்ட் போட்டிகளில் சுவர் போல நின்று ஆடும் புஜாராவை எந்த அணியும் எடுக்காத போது சென்னை அணி அடிப்படை விலையான 50 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டது இந்த ஆண்டுதான்.

இந்நிலையில் இப்போது புஜாரா சென்னை அணியில் இணைந்து தோனி பாயுடன் விளையாடுவதற்கு மிகவும் ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.