வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 19 மார்ச் 2022 (16:05 IST)

Mr and Mrs … ரொமாண்டிக்கான புகைப்படத்தை வெளியிட்ட மேக்ஸ்வெல் மனைவி!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான கிளன் மேக்ஸ்வெல் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான கிளன் மேக்ஸ்வெல் சென்னையை சேர்ந்த வினிராமன் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக முன்பே அறிவித்திருந்தார். ஆஸ்திரேலியாவில் பார்மஸி படிப்பு படித்து வரும் வினி ராமன், கடந்த சில ஆண்டுகளாக மேக்ஸ்வெல்லை காதலித்து வந்ததாகவும் இதனை அடுத்து இவரது பெற்றோர்கள் சம்மதத்துடன் நடக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் இந்த திருமணத்திற்கு திருமண பத்திரிகையை தமிழில் அச்சடித்து மணமகள் குடும்பத்தினர் வெளியிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மணமகள் வினி ராமன் சென்னை மேற்கு மாம்பலத்தில் சேர்ந்தவர் என்பதும் ஆனால் தற்போது பெற்றோருடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இன்று மேக்ஸ்வெல்லின் மனைவியான வினி ராமன் மேக்ஸ்வெல்லுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘mr and mrs maxwell’ எனக் குறிப்பிட்டுள்ளார். கிறித்துவ முறைப்படி இந்த திருமணம் நடந்த நிலையில் மீண்டும் இந்து முறைப்படி மார்ச் 27 ஆம் தேதி திருமணம் நடக்கும் எனத் தெரிகிறது.