1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : சனி, 28 டிசம்பர் 2019 (18:18 IST)

மேரி கோம், என்னிடம் நடந்து கொண்டது வேதனையாக உள்ளது - நிஹாத் ஜரீன்

குத்துச் சண்டை மேரி கேம் , என்னிடம் நடந்து கொண்ட விதம் எனக்கு வேதனை அளிப்பதாக குத்துச் சண்டை வீராங்கனை நிஹாத் ஜரீன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற குத்துச் சண்டை போட்டியில் நிகாத் ஜரீன்னை தோற்கடித்த மேரி கோம்  ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
 
ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றுக் குத்துச் சண்டை போட்டிகள் வரும் ஆண்டில் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. இதற்காக, இந்திய பெண்கள் குத்துச் சண்டை அணியைத் தேர்வு செய்யும் போட்டி டெல்லியில் நடைபெற்றது.
 
51 கிலோ  உடல் எடை பிரிவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜுனியர் உலக சாம்பியன் நிகாத் ஜரீன், ஜோதி குலியா என்பவரை தோற்கடித்தார்.  
 
அதேபோல் 6 முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற மேரி கோம், ரிதுகிரிவாலை தோற்கடித்தார்.
 
அடுத்த நடைபெற்ற போட்டியில், மேரி கோம், நிகாத் ஜரினை தோற்கடித்தார். இதில் மேரி கோம் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு தேர்வானார்.
 
அதன்பின்,  நிகாத், மேரிக்கு வாழ்த்துகள் தெரிவிக்க கை நீட்டியுளார். ஆனால் , மேரி கோம் அவரை மதிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. எனவே மூத்தவர்கள் இளையோரை மதிக்க வேண்டும்; மேரி கோம் அப்படி நடந்து கொண்டது எனக்கு வேதனையாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.