புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 28 டிசம்பர் 2019 (08:55 IST)

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர விருது வழங்கும் விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்துக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கப்பட உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் தமிழகத்தை சேர்ந்தவர். ஸ்ரீகாந்த் 43 டெஸ்ட் போட்டிகளிலும், 146 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியவர். மொத்தமாக 6153ரன்கள் எடுத்த இவர் 6 சதங்களை வீழ்த்தியவர். 1983ம் ஆண்டு உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இருந்த ஸ்ரீகாந்த் இறுதி ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்தவர் ஆவார்.

2019ம் ஆண்டிற்கான கிரிக்கெட் துறை சார்ந்த சாதனையாளர்களுக்கான விருதை இந்திய கிரிக்கெட் வாரியம் ஜனவரி 12ம் தேதி வழங்க இருக்கிறது. அதில் ஸ்ரீகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. அதேபோல இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ராவுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.