திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 4 மே 2020 (20:08 IST)

சுரேஷ் ரெய்னாவின் கருத்துக்கு பலரும் ஆதரவு…

சீனாவில் இருந்து பரவிய கொரொனா வைரஸ் பல்வேறு உலக நாடுகளில் பரவி வருகிறது.இந்தியாவில் மூன்றாது கட்டமாக ஊரடங்கு உத்தரவு இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர் நடிகைகள் தங்கள் அனுபவங்களை மக்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் வீரர் சுரேஷ் ரெய்னா தனது மனைவி குழந்தைகளுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், இந்த ஊரடங்கு உத்தரவு பல்வேறு வழிகளில் குடும்பத்துடன் அன்பையும் , பிணைப்பையும் ஏற்பட்டுத்தியுள்ளது. உலகில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக வீட்டில் நடைபெற்று வரும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது.யாராவது இதுபோல் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் உதவிக்கு அழைக்கவும், பேசாமல் இருக்கக் கூடாது எனதெரிவித்துள்ளார்.
இவரது பதிவுக்கு  பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.