செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : திங்கள், 4 மே 2020 (16:17 IST)

மண்டபத்தை தரமுடியாது என்ற தவறான தகவல் பரவுகிறது..? ரஜினி தரப்பு விளக்கம் !

ராகவேந்திரா மண்டபத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதாக லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், இது தவறான தகவல் என நடிகர் ரஜினிகாந்த் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளனர்.

தமிழககத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் வேளையில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி அனைத்து திருமண மண்டபங்களையும் வழங்க சொல்லி கேட்டுள்ளது.

இதற்கு முன்னதாகவே விஜயகாந்த் தனது கட்சி அலுவலகம் மற்றும் கல்லூரியையும், திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தையும் தற்காலிக மருத்துவமனையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் ரஜினி கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா மண்டபத்தை தற்காலிக மருத்துவமனையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சிக்கு தெரிவித்து இருந்தனர்.

அனால் இப்போது ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் மண்டபத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று கொண்டு இருப்பதாக சொல்லியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது வேண்டுமென்றே மண்டபத்தைக் கொடுக்காமல் இருப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்தன.

இதுகுறித்து தற்போது ரஜினிகாந்த் தரப்பு  அறிக்கை வெளியிட்டுள்ளனர் அதில்,
கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தை கரோனா சிகிச்சை வார்டாக பயன்படுத்திக் கொள்ளலாம் பராமரிப்பு பணி நடப்பதால் மண்டபத்தை தர முடியாது என கூறியதாக தவறான தகவல் பரவி வருகிறது  என தெரிவித்துள்ளனர்.