சச்ச்சினை மட்டுமே நம்பிய காலம் – மனம் திறந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் !

Last Updated: செவ்வாய், 19 மே 2020 (16:38 IST)

சச்சினை மட்டுமே இந்திய அணி 1990-1997 ஆகிய ஆண்டுகளில் நம்பி இருந்ததாக சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சமூகவலைதளங்களில் சக வீரர்களோடு உரையாடி வருகின்றனர். அதன் மூலம் ரசிகர்களுக்கு பல அரிய விஷயங்கள் கிடைக்கின்றன. அந்த வகையில் ரவிசந்திரன் அஸ்வினுடன் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் நடத்திய உரையாடலில் சச்சினைப் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

அதில் ‘சச்சின் 1989 ல் அறிமுகமானார். ஆனால் அதற்கு ஒரு வருடத்துக்குள்ளாகவே அவர் ஒரு சர்வதேச வீரர் என்பதை உலகுக்கு நிரூபித்து விட்டார். அவரின் ஆட்டம் ‘எங்களை எல்லாம் இவன் வேறு மாதிரி விளையாடுகிறான் என யோசிக்க வைத்தது. மீதமுள்ள பேட்ஸ்மேன்கள் வெளிநாட்டில் கடினமான பவுன்சர்களில் விக்கெட்டுகளைக் காக்க போராடியபோது, டெண்டுல்கர் சதங்களை அடித்தார். சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் 1996 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தங்கள் முத்திரையைப் பதித்தாலும் 1990-1997 ஆம் ஆண்டுகளில் அனைத்துமே டெண்டுல்கர் தான் எனக் கூற முடியும். அதன் பிறகே பேட்டிங் பொறுப்புகள் மூவருக்கும் பிரிந்தன’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :