1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 15 மே 2020 (17:40 IST)

ஐபிஎல் போட்டிகள் நடக்கவில்லை என்றால் வீரர்கள் சம்பளம் கட்: கங்குலி!

ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை என்றால் வீரர்களின் சம்பளத் தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என தகவல். 
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதை தொடர்ந்து மார்ச் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 
 
இதனால் மார்ச் மாதம் நடக்க இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரலுக்கு தள்ளி வைக்கப்பட்டன. ஆனால் ஏப்ரலிலும் ஊரடங்கு தொடர்ந்ததால் மறு அறிவிப்பு வரும் வரை ஐபிஎல் போட்டிகள் குறித்து அறிவிப்பு வெளியாகாது என கூறப்பட்டது.
 
இந்நிலையில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஐபிஎல் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்த நிலையில் பிசிசிஐ சூழ்நிலை காரணமான இதனை நிராகரித்தது. தற்போது இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை என்றால் வீரர்களின் சம்பளத் தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என பிசிசிஐ தலைவர் கங்குலில் தெரிவித்துள்ளார். 
 
அவர் விரிவாக கூறியதாவது, ஐபிஎல் போட்டிகள் நடத்தவில்லை என்றால் ரூ.4,000 கோடிக்கு நஷ்டம் ஏற்படும். இதனை சமாளிக்க வீரர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். அப்படி போட்டி நடந்தால் இதுபோன்ற பிடித்தங்கள் இருக்காது என தெரிவித்துள்ளார்.