திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 12 ஏப்ரல் 2018 (23:54 IST)

மும்பைக்கு இரண்டாவது தோல்வி: ஐதராபாத் அபார வெற்றி

இன்று ஐதராபாத்தில் நடைபெற்ற மும்பை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான
போட்டியில் ஐதராபாத் அணி 1 விக்கெட்டு வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
 
டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்ததால் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 147 ரன்கள் எடுத்தது.
 
148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் அணியின் தொடக்காட்ட வீரர்கள் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். தவான் 45 ரன்களும், சஹா 22 ரன்களும் எடுத்தனர். இருப்பினும் கேப்டன் வில்லியம்சன், பாண்டே, ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் மும்பைக்கும் வெற்றி வாய்ப்பு ஏற்பட்டது.
 
ஆனால் ஹூடா, யூசுப் பதான் ஆகிய இருவரின் பொறுப்பான ஆட்டம், அணியை வெற்றிப்பாதைக்கு எடுத்து சென்றனர். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 151  ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.