செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 25 மே 2022 (20:27 IST)

டாஸ் வென்ற லக்னோ எடுத்த அதிரடி முடிவால் முதல் ஓவரிலேயே விக்கெட்

lucknow vs bangalore eliminator
ஐபிஎல் தொடரில் இன்றைய எலிமினேட்டர் போட்டியில் மழை பெய்த போதிலும் அதே 20 ஓவர் போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் சற்று முன்பு டாஸ் போடப்பட்ட நிலையில் லக்னோ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து பெங்களூரு அணி அதிரடியாக களத்தில் இறங்கிய நிலையில் முதல் ஓவரிலேயே டூபிளஸ்சிஸ் விக்கெட்டை லக்னோ வீழ்த்தியது.  அவர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார் 
 
இதனை அடுத்து தற்போது விராட் கோலி மற்றும் ரஜத் படிதார்  விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் பெங்களூர் மற்றும் லக்னோ அணிகள் விளையாடி வரும் நிலையில் இந்த போட்டியின் முடிவு எப்படி இருக்கும் என்பதை இன்னும் சில மணி நேரம் பொறுத்திருந்து பார்ப்போம்