செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 22 மே 2022 (19:27 IST)

கடைசி லீக் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத்!

srh vs pbks
கடைசி லீக் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத்!
கடந்த சில வாரங்களாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் லீக் போட்டி முடிவுக்கு வருகிறது
 
இன்றைய போட்டியில் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது
 
புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ள ஐதராபாத்துக்கும் ஏழாவது இடத்தில் உள்ள பஞ்சாப் அணிக்கும் இன்றைய போட்டி நடைபெறுவதால் இன்றைய வெற்றி தோல்வி பிளே ஆப் அணிகளை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதால் இன்றைய போட்டி உப்புக்கு சப்பாணி போட்டியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளதை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் ஐதராபாத் பேட்ஸ்மேன்கள் களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி யாருக்கு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்