வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 30 மார்ச் 2024 (13:40 IST)

Fans war இந்தியாவில் அசிங்கமான நிலைக்கு செல்கிறது… அஸ்வின் ஆதங்கம்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மாவை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்ட்யாவை நியமித்ததில் இருந்தே அந்த அணிக்குள் சுமூகமான சூழல் இல்லை என்று சொல்லப்பட்டு வருகிறது. ஹர்திக்கிடம் கேப்டன்சி கொடுக்கப்பட்டது குறித்து ரோஹித், பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு அதிருப்தி இருந்ததாக சொல்லப்படுகிறது.

இப்போது ஐபிஎல் தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில் மும்பை அணி இரண்டு குழுக்களாக பிரிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரோஹித் தலைமையில் பும்ரா, திலக் வர்மா உள்ளிட்டவர்கள் ஒரு குழுவாகவும், பாண்ட்யா தலைமையில் இஷான் கிஷான் உள்ளிட்டவர்கள் ஒரு குழுவாகவும் செயல்படுவதாக சொல்லப்படுகிறது. இதில் ஹர்திக்கின் குழுவுக்கு அணி உரிமையாளர்கள் ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ரோஹித்ஷர்மாவின் ரசிகர்கள் ஹர்திக் பாண்ட்யாவை சமூகவலைதளங்களில் கடுமையாக திட்டி வருகின்றனர். இந்த ஃபேன் வார் குறித்து பேசியுள்ள அஸ்வின் “இந்தியாவில் இந்த ஃபேன் வார் அசிங்கமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்தில் எல்லாம் இதுபோல ரசிகரகள் சொந்த நாட்டு வீரர்களை திட்டிக் கொள்வதில்லை.இந்தியாவில் கங்குலி தலமையில் சச்சின் விளையாடவில்லையா? தோனி தலைமையில் எல்லா ஜாம்பவான்களும் விளையாடவில்லையா?” என அவர் தற்போது ரசிகர்கள் சண்டை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.