திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 3 செப்டம்பர் 2020 (14:20 IST)

ஐபிஎல் தொடரில் இருந்து லசித் மலிங்கா விலகல்!

ஐபிஎல் 2020 தொடரில் இருந்து மும்பை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் லசித் மலிங்கா விலகியுள்ளார்.

ஐபிஎல் 2020 தொடருக்காக 8 அணி வீரர்களும் துபாய்க்கு சென்று அங்கு தங்கியுள்ளனர். அங்கு இப்பொது தனிமைப்படுத்தப்பட்ட காலத்துக்கு விரைவில்  வீரர்கள் பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை அதிக முறை வென்ற மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மலிங்கா தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அவருக்கு பதிலாக ஆஸீயின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்ஸன் அணியில் இணைய உள்ளார் என நிர்வாகம் அறிவித்துள்ளது.