முதல்முறையாக ஐபிஎல் பெங்களூரு அணியில் இடம்பெற்ற பெண்

Last Modified வியாழன், 17 அக்டோபர் 2019 (22:04 IST)
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி திருவிழா நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டும் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கி விட்டன
இந்த போட்டிக்கான ஏலம் வரும் டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி பல்வேறு வெற்றிகளை தொடர்ந்து பெற்று வந்த போதிலும் அவரது தலைமையிலான பெங்களூர் அணி மட்டும் ஐபிஎல் போட்டிகளில் படுதோல்வியை சந்தித்து வருகிறது

இதனை அடுத்து பெங்களூரு அணியில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது பெங்களூர் அணி வீரர்களின் உடல் தகுதி மற்றும் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த மசாஜ் நிபுணர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு பெண் என்பதும் நவ்னிதா கவுதம் என்ற இவர் வீரர்களின் உடல் நலன்கள் குறித்த அக்கறையில் ஈடுபடுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த வரலாற்று சிறப்புமிக்க மாற்றத்தை ஏற்படுத்துவதில் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அணியின் வீரர்களை சரியான பாதைக்கு அழைத்து செல்வதோடு அவர்களது உடல்தகுதியில் நவ்னிதா கவுதம் தீவிர கவனம் செலுத்துவார் என்றும் பெங்களூர் அணியின் உரிமையாளரான சஞ்சீவ் சூரிவாலா தெரிவித்துள்ளார்


இதுகுறித்து நவ்னிதா கவுதம் கூறுகையில், ‘விளையாட்டு அரங்கில் பெண்களின் பங்காளிப்பு வெற்றியை தேடி தருகிறது என்பதற்கு இது சிறந்த உதாரணமாக இருக்கும். என்னுடைய திறமையை ஆர்.சி.பி கண்டுபிடித்ததில் எனக்கு சந்தோஷம் அளிக்கிறது“ என்றும் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :