புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 9 அக்டோபர் 2019 (14:35 IST)

ஒன்லி வாக்கிங்; நோ ஷாப்பிங்: புது ரீலை கட்டவிழ்த்த வக்கீல்!

பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து சசிகலா வெளியே சென்றதாக அறிக்கையில் எங்கும் குறிப்பிடவில்லை என சசிகலாவின் வக்கில் தெரிவித்துள்ளார். 
 
சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பாகி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 4 வருடம் சிறை தண்டனை விதித்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன்.
 
இந்நிலையில் கடந்த ஆண்டு சிறையில் இருந்தபடியே மாற்று உடைகளில் சசிகலா ஷாப்பிங் சென்றதாக பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின. மேலும் சிறை விதிகள் மீறி லஞ்சம் கொடுத்து சலுகைகள் பெற்றதாக சசிகலா மீது கர்நாடகா சிறைத்துறை முன்னாள் டிஜிபி ரூபா புகார் அளித்தார். அதற்கான ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்தார்.  
இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க இதுகுறித்து விசாரணை நடத்த குழுவை அமைத்தது கர்நாடக அரசு. இதனை தொடர்ந்து தற்போது அந்த விசாரணை குழு ரூபாவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையே என அறிக்கை வெளியாகி பரபரப்பை கூட்டியுள்ளது.
 
ஆனால், பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து சசிகலா வெளியே சென்றதாக அறிக்கையில் எங்கும் குறிப்பிடவில்லை என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, 
தற்போது வெளியாகியுள்ள அறிக்கையில் சசிகலா மீது நேரடியாக எந்த குற்றச்சாட்டும் இல்லை. பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து சசிகலா வெளியே சென்றதாக அறிக்கையில் எங்கும் குறிப்பிடவில்லை. சிறைக்குள் நடந்து செல்லும் காட்சிகள்தான் சிசிடிவியில் பதிவாகியுள்ளன என புதுக்கதையை கட்டவிழ்த்துள்ளார்.