திங்கள், 30 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (17:42 IST)

கோலிக்கு பந்துவீச மறுத்த ஜேமிஸன்… காரணம் இதுதானாம்!

பெங்களூர் அணியில் இடம்பிடித்துள்ள கைல் ஜேமிசன் வலைப்பயிற்சியின் போது கோலிக்கு பந்துவீச மறுத்துள்ளாராம்.

நியுசிலாந்து அணியின் இளம் ஆல்ரவுண்டர் கைல் ஜெமிசன் பெங்களூர் அணிக்காக ஐபிஎல் விளையாடி வருகிறார். இந்நிலையில் வலைப்பயிற்சியின் போது கோலி தனக்காக பந்துவீச கேட்ட போது ஜேமிசன் அதை மறுத்துள்ளாராம். அதற்குக் காரணம் இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடக்க உள்ளது. அதனால் தன்னுடைய சூட்சுமங்களை கோலி டீகோட் செய்துவிடுவார் என்று அஞ்சி மறுப்பு தெரிவித்தாராம் ஜேமிசன். இதை சக வீரரான கிறிஸ்டியன் தெரிவித்துள்ளார்.