1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (12:48 IST)

பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்பிளே நீக்கமா?

Kumble
ஐபிஎல் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ப்ளேவை நீக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் 
கடந்த மூன்று சீசன்களிலும் பஞ்சாப் அணி இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெறாத நிலையில் பயிற்சியாளர் மீது பஞ்சாப் அணி நிர்வாகத்தினர் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து கும்ப்ளேவை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
கடந்த சீசனில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த மயங்க் அகர்வால் மொத்தம் 196 ரன்கள் மட்டுமே எடுத்ததால்  அவரது பதவியும் பறிபோகும் என்று கூறப்படுகிறது