சங்ககராவை அநாகரிகமாக நடத்திய இங்கிலாந்து விமான நிலைய அதிகாரி


லெனின் அகத்தியநாடன்| Last Modified புதன், 13 மே 2015 (18:38 IST)
இலங்கை வீரர் குமார் சங்ககராவிடம் இங்கிலாந்து விமான நிலைய அதிகாரி ஒருவர் அநாகரிகமாக நடந்து கொண்டதால் வேதனை அடைந்துள்ளார்.
 
 
இதுகுறித்து குமார் சங்ககரா தனது ‘டுவிட்டரில்’ வெளியிட்டுள்ள செய்தி பின்வருமாறு:
 
நேற்று இரவு மீண்டும் லண்டனில். முரட்டுத்தனமான, மிகவும் அநாகரிகமான இங்கிலாந்து குடியேற்றத்துறை அதிகாரி ஒருவரால் மோசமான அனுவபம் ஏற்பட்டுவிட்டது.
 
என்னால் கண்கானிப்பின் தேவையை முற்றிலும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் பொதுவான மரியாதை மற்றும் நடத்தைகளை கூட கொஞ்சம் கேட்க வேண்டியிருந்தது.
 

 
அதிர்ஷ்டவசமாக மற்ற இங்கிலாந்து குடியேற்ற அலுவலர்கள், அன்பாக இருந்தனர். 15 ஆண்டுகளாக இங்கிலாந்து சென்று வந்துள்ள எனக்கு முதன் முறையாக இதுபோன்று நடந்துள்ளது. 
 
நிறம், சமயம் அல்லது புகழ் இவையெல்லாம் ஒரு விஷயமே இல்லை. ஒவ்வொரு பயணிகளுக்கும் நல்ல முறையில் மரியாதை அளிக்கப்பட வேண்டும். அதிர்ஷ்டவசமாக ஒரு மனிதனால் ஒருமுறை மட்டுமே இதுபோல் நடந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :