1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (13:00 IST)

வங்கி ஊழியர்களைக் கொன்று ரூ.11 லட்சம் கொள்ளை - கொள்ளையர்கள் அட்டூழியம்

டெல்லியில் ஏடிஎம்மில் பணம் நிரப்பச் சென்ற காசாளர் மற்றும் பாதுகாவலரை சுட்டுக் கொன்று 11 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி நரோலா நகரில் உள்ள ஏடிம்மில் பணம் நிரப்புவதற்காக தனியார் வங்கி காசாளர் மற்றும் பாதுகாவலர் வேனில் சென்றனர். ஏடிஎம்மிற்கு வெளியே வேனை நிறுத்திவிட்டு, பணத்தை நிரப்ப காசாளர் முற்பட்டார்.
 
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், காசாளர் மற்றும் பாதுகாவலரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு 11 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். இதில் சம்பவ இடத்திலே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலிலே இது போன்ற சம்பவம் நடைபெற்றது அப்பகுதிவாசிகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் தான் இதுபோன்ற சம்பவம் நடைபெறாது என பொதுமக்கள் கூறிவருகின்றனர்.