தொடர்புடைய செய்திகள்
- பேச்சு வார்த்தை வெற்றி - சினிமாத்துறையின் வேலை நிறுத்தம் வாபஸ்
- டிச. 3ம் தேதி ஜெயலலிதா 20 நிமிடம் பேசினார் - சசிகலா வழக்கறிஞர் பேட்டி
- டாக்டர்களின் தீவிர முயற்சியால் உயிருள்ள மீனை விழுங்கிய 11 மாத குழந்தை உயிர் பிழைப்பு
- 3 நாட்களில் முத்தரப்பு பேச்சுவார்த்தை: விஷால்!
- ஸ்ட்ரைக் எதிரொலி; தெலுங்கு, மலையாள படங்களை குறிவைக்கும் நடிகைகள்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் தாக்க்ப்பட்டதால் அனைத்து பயிற்சி மருத்துவர்களும் காலவறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அதுல்குமார் என்பவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்தவாரம் பயிற்சி மருத்துவர் ஒருவரை மற்ற மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் முன்பு அடித்துள்ளார். இச்சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மருத்துவர் அதுல்குமார் சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் மன்னிப்பு கேட்டார்.
இதனை ஏற்றுக்கொள்ளாத பயிற்சி மருத்துவர்கள், அதுல்குமார் பேராசிரியராக பணியாற்றுவதற்கு தகுதி இல்லை என்றும் அதுலை மருத்துவமனையிலிருந்து நீக்க வேண்டும் என நேற்றிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தால் நோயாளிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
