1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 28 நவம்பர் 2020 (11:06 IST)

அதை செய்யாமல் காரணங்கள் சொல்லக்கூடாது – தோல்வி குறித்து கேப்டன் கோலி ஆதங்கம்!

ஒட்டுமொத்தமாக சிறப்பாக விளையாடாமல் தோல்விக்கான எந்த காரனங்களும் சொல்லக் கூடாது என இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதில் இந்திய அணி வீரர்களின் பவுலிங் மிக மோசமாக இருந்ததால் 374 ரன்களை ஆஸ்திரேலியா சேர்த்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி, ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் விரைவாக அவ்ட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

இந்நிலையில் தோல்வி குறித்து கோலி ‘ஒட்டுமொத்தமாக ஒரு அணியாக, சரியாக விளையாடாதபோது காரணங்கள் சொல்லக் கூடாது. எங்களுக்கு பயிற்சிக்கு நீண்ட காலம் கிடைத்தது. ஆனால் நீண்ட காலமாக டி 20 போட்டிகளில் விளையாடினோம். நீண்ட நாட்களுக்குப் பின் முழு ஒரு நாள் போட்டியில் ஆடியிருக்கிறோம். 25-26 ஓவர்களுக்குப் பின் அணி வீரர்களின் உடல் மொழி ஏமாற்றமளித்தது. நேர்மறைச் எண்ணத்தோடு ஆடத்தான் அனைவருமே வந்திருக்கிறோம். எனவே அதே சிந்தனையோடு முன்னேறி செல்வோம்.’ எனக் கூறியுள்ளார்.